fbpx

Iragenum Ninaivugal Tamil Indie Song | Sri Lanka | Music Album | Jaffna



#IragenumNinaivugal #TamilMusicAlbum

Iragenum Ninaivugal

என் மெல்லிசையே…
நீ உதிர்த்துச் சென்ற இறகெனும் நினைவுகள் மெல்ல மெல்ல மெளனக் காற்றில் ஊசலாடி ஈர்க்கும் விதிக்கேற்ப விழுந்துகொண்டிருக்கின்றன…
அவை என்னோடு தீ திண்டு தீருமுன்… ஆண்மாவின் முகம் காட்ட ஆசையில் உருகிறேன்..

உன் பிரியங்கள் நிராகரித்த பலதும் உயிர்ப்புடன் என் அருகிலிருந்தும் அவையும் உனைப்போல பயனற்ற அமைதியின் நிழல்கள்….

சர்வ அண்டங்களும் தன்னுள் அடக்கிய ஓர் ஆத்மாவின் பொறுமையை எஞ்சிய என் தவக்காலங்கள்…

உயிர் தங்கும் என் பிராணன் நீ
இட நெஞ்சின் தாழம் உன் பெயர்
காலமொரு மாய வலை
காட்சிகள் வெறும் கனவு
காதல் நினைவுகள் சாட்சி
உயிர் வரை நீயெனும் நீட்சி

ஆனால்! தெளிந்த வான் போலவே இருள் மேகங்களையும் காதலிக்கக் கற்றுக்கொள் கண்மணி….
கண்ணெதிரே அவை மழையாகி விருட்ச விதைகளிற்கு உயிர்தரும்.
விருட்சங்களோ
நமக்கு உயிர் தரும் சுவாசமாய் மாறும்.
என் சுவாசக்காற்று நீ ஆதலால்….

நீ என் தலை கோதிய அதே மர நிழல்கள் இப்போது சருகுகளால் நிரம்பியிருக்கலாம்… அன்று நம் இதழ்கள் பதிக்கையில் தாம் எம்மாத்திரம் என்று குரலிழந்த தேன் சிட்டுகள் இப்போது வேறு தேசம் சென்றிருக்கலாம்….

கோடி ஆண்டுகள் கடந்தாலும் ஒரே பெளர்ணமியை ரசித்திக்கொண்டே இருக்கும் மனித குலம்…. அதன் கறைகள் பற்றி என்றும் குறை உரைக்கவில்லை
புலப்படாமல் அலையும் காற்று உள்ளிழுக்க உயிராதல் போல… எங்கும் நீ நிறைந்து இறை காடினாய்..

“””” தூரத்தில் ஒளிரும் என் சின்ன நிலவிற்கு……
எங்கிருந்தோ உன் நினைவுகளில் மைத்துளிகளைச் சொட்டிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்திரக் காரனின் மடல்…உன்னால் உதிர்ந்த ஒவ்வொரு துளிகளும் ஆயிரம் உணர்வுகளுடன் காற்றில் கரைகிறது.

என் விரல்கள் பின்னிய கார்குழற் கயிறுகளில் மாய மனதும் ஏறமுடியாது சிக்கி மாய்கிறது…
காதல் வலையெனும் வார்த்தையின் அர்த்தங்களை இன்னமும் அது புரிந்துகொள்ளத் தவிக்கிறது…

தாய்க்குப் பின் தாரமென உரைத்ததெல்லாம் ஒளிய தாயன்பே தாரமென உனரவைத்த அந்தநொடி……

தாய்மை தொலைக்க மடி சாய்த்துத் தலைகோதி, உன் உதட்டின் ஈரம் படக் கன்னமெல்லாம் காதற்செடி.

உன்னைத் தொலைப்பதாய் என்னைத் தொலைக்கிறேன் என்னோடு சேர்த்து உன்னையும் தொலைக்கிறேன்.

இருண்ட பின் இரவுகளின் பனிகளோடு காமத்துளி…. கரைந்ததோ பனித்துளிகள் காலமெலாம் காதல் கடல்…
தழுவலில் உன் வாசம் என்சுவாசம் ஆனதடி.. சுவாசத்தைத் தொலைத்தெங்கு தொலைதூரம் நான் கடந்தேன்.

இருண்ட இரவுகளை மெளனக் குதிரையிலே இறுக அணைத்தபடி நாம் கடக்க… காதோர சலசலப்பு ஓடைகளில் கேட்குதடி. காலங்கள் கடந்தாலென்ன தோளோடு நீ இரடா… இன்னமும் வற்றிப்போகா ஓடைகளை நம்பித்தான் வாழுமந்த மீனினம் போல். காட்சிகள் மாற மாற காரிகை தாகம். நீ போல் நீ தாண்டி வேறில்லை வா உயிரே….

Cast – Dharshan || Kaushi Raj
Directed By – Jenosan Rajeswar
Associate Dir – Kapil Sham
Asst Dir – Nelon Siva || Suvanya
Music – Pathmayan Sivananthan
Lyrics – Watsu
Vocal – Watsu || Tharu || Kayu Ammu
Art Director – Kapil Sham
Cinematography – Watsu
Lights – Jathu
DI – Rishi Selvam
Edit – Kathir
Design – Rajeevan
Stills – PSN Pavin
Make Up – Agal By Shaki
Production Manager – Rawan Vinith

Vikatan App – http://bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Source

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: